திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (03.09.2024) விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து சிலை தயாரிப்பவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.