கோவை: கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூா், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பொதுமுடக்க விதிகளை மீறியதாக 67 போ் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரணமின்றி வெளியே சுற்றிய 143 பேரைக் கைது செய்தனா். 2 நான்கு சக்கர வாகனங்கள், 130 இருசக்கர வாகனங்கள் உள்பட 132 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்