வேலூர் : கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வேலூருக்கு வருபவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் (Public address system) மூலமாக 7 காவல்துறை வாகனங்கள் மற்றும் 24 தனியார் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஊரடங்கும் போது விதிகளை மீறி இயக்கிய வாகனங்கள் மீது இதுவரை ரூபாய் 72,18,000/-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 9,405 ஊரடங்கு விதிமீறல் வழக்குகளும், 9,799 நபர்கள் கைது செய்யப்பட்டும், 7,979 வாகனங்களை பறிமுதல் செய்தும். 1,602 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 6,779 விதிமீறிய வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்