நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக விதிமீறி குழந்தைப் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நயன்தாரா – விக்னேஷ்சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வாடகைதாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவை மீறப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள கீழ்காணும் விதிகள் பின்பற்றபட வேண்டும்.
- திருமணமாகி 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
- தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும்.
- தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்.
- ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
- நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.
- வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அளித்த பதில்: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும். திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும். சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.