சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் மேலேரத வீதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் 31.05.2020 அன்று மாயகிருஷ்ணன் தரப்பினரை பொன்னுச்சாமி தரப்பினர்களான ராமநாதன், விக்னேஸ்வரன், புவனேஸ்வரன், தனபால் ஆகியோர் கும்பலாக சென்று தகாத வார்த்தைகளால் பேசி, மரக்கட்டை மற்றும் வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொன்னுச்சாமி மகன் கௌதம் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் மேற்படி நபர்கள் மீது u/s. 147, 148, 294(b), 324, 506(ii) IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து, பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை