கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 46 |இவர் சிறுகுந்தாவில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது வீட்டில் கை கழுவ பாத்ரூம் சென்றார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மனைவியும் மேகலா வால்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்