தஞ்சை: தஞ்சை மாவட்டம் கண்ணுக்குடி மேற்கு ஆவுடையார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் 35. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி.ரவளிபிரியா கலெக்டர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.இளங்கோவன் குண்டர் சட்டத்தில் தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.