திண்டுக்கல்: திண்டுக்கல் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் இன்று அதிகாலை சாலையில் ரத்தம் சிதறி கிடந்தது இதை கண்ட பொதுமக்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஒரு வாலிபரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அதை கைப்பற்றிய போலீசார் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வாலிபர் யார் அவரை தாக்கிய 2 இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா