ஈரோடு; கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 27.இவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஆசை காட்டி,அந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்து பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி