விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 23. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டனர்.
சிறுமியைகடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆறுமுகத்தை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.















