நெல்லை : நெல்லை பழைய பேட்டை பகுதியை சேர்ந்த காளிராஜ் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார், இவர் கடந்த ஆண்டு மேகலா என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் உறவு முறையால் இரு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்து உள்ளது, எனவே அவர்கள் பாளை பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காளிராஜ் சாந்தி நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அவரை சராமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் கமிஷனர் திரு.சரவணன், பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மகேஷ் உள்ளிட்ட போலீசார் பலரும் அங்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இவர்கள் இருவரும் முறை தவறி திருமணம் செய்து உள்ளதால் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கூறி உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.