கோவை: கோவை சுங்கத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அர்சத் (வயது 19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.