கோவை : கோவை பீளமேடு விமான நிலையம் பக்கம் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் விக்னேஷ் வயது 24 நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இவர் வால்பாறையை சேர்ந்த தனது நண்பர் சுஜித் வயது 30 என்பவருடன் பைக்கில் அங்கு உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு 4 ஆசாமிகள் நின்றுகொண்டிருந்தனர் இவர்களை வழிமறித்து நிறுத்தி குடிக்க பணம் தாருங்கள் என்று கேட்டார்கள் . விக்னேஷ் பணம் இல்லை என்றார்இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமிகள் விக்னேஷ் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்தனர். பிறகு அவரை கத்தியால் குத்தினார்கள் இதைப்பார்த்த சுஜித் அங்கிருந்து ஓடி விட்டார் படுகாயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.. கொலை செய்யப்பட்ட விக்னேஷ் காளப்பட்டி யிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார் இதுகுறித்து சுஜித் பீளமேடு போலீசில் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார் இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன இவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்