திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ்நகர் தெருவில் வசிக்கும் நபரை அசிங்கமாக திட்டியும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாக கொடுத்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி ராகவேந்திரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான குற்றவாளி ராகவேந்திரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி குற்றவாளி ராகவேந்திரன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்