தர்மபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெத்தானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ராஜ் குமார் இன்று மதியம் பெரும்பாலை சென்றுவிட்டு ராஜ்குமார் வீடு திரும்பியுள்ளார். அப்போது பெத்தானூர் சாலையில் முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை வழிமறித்த திவாகர் தான் வைத்திருந்த பட்டாக்கத்தியால் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினான்.
இதில் ராஜ்குமாருக்கு உடலில் கழுத்து தலை வலது கை வயிற்றுப்பகுதி தொடை என ஆறு இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள் திவாகரை தடுக்க முற்பட்டபோது.
அவர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பி ஓடிவிட்டான். உயிருக்கு போராடிய ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரும்பாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.