சென்னை : வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20, என்பவர் 13.09.2021 தனது நண்பர் விக்னேஷ்வரன் என்பவருடன் சேர்ந்து அன்னை சத்யா நகர், கருங்காளியம்மன் கோயில் அருகில் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் விக்னேஷ்வரன் மேற்படி சந்தோஷ்குமாரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து சந்தோஷ்குமாரின் மனைவி மஞ்சுளா என்பவர் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, P-5 எம்.கே.பி நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ்வரன், 23, வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேற்படி நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
