சென்னை: சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்புனு என்ற செல்வராஜ் (வயது 24). இவர், தன்னுடைய நண்பர்களான ராயபுரம் ஜி.எம். பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ் (21), நிசாந்தன் (25), எண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகியோருடன் சென்று எண்ணூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் கடந்த 14-ந்தேதி வீட்டு வேலைக்கு துளைபோடும் எந்திரத்தை வாடகைக்கு கேட்டார்.
. அப்போது குடிபோதையில் இருந்த அப்புனு, தான் எண்ணூர் போலீசில் சரண் அடையப்போவதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அப்புனுவை பீர்பாட்டில் மற்றும் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, அதே பகுதியில் கடற்கரை மணலில் உடலை புதைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் சென்றுவிட்டனர்.
விசாரணையில் குடிபோதையில் இருந்தபோது அப்புனு, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைவதாக கூறியதால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்று விட்டு உடலை மணலில் புதைத்து விட்டோம் என்று கூறினர். இதையடுத்து தினேஷ், முத்தமிழ், நிசாந்தன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.