திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
கடந்த 15.05.2022-ந்தேதி கேகே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்புரம் கேகேநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அதிகாலை 0430மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மளிகை கடை உரிமையாளாரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ1000/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் குற்றவாளியான பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த ஜோஸ்வ ராஜேஷ்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 10.06.2022-ந்தேதி மேற்படி குற்றவாளி ஜோஸ்வ ராஜேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமதி.மீனாசந்திரா அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று 27.03.2024-ம்தேதி, மேற்படி குற்றவாளி ஜோஸ்வ ராஜேஷ்குமாருக்கு ச/பி 392 r/w 397 IPC ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.