கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (31.07.2023) ஆம் தேதி குற்றவாளிக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஐந்தாண்டு சிறை தண்டனை +1,000/-ரூபாய் அபராதம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை+ 4,000/- ரூபாய் அபராதம் என மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை + 5000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்