சேலம்: சேலம் மாவட்டம் சிக்கனம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் 21. இந்த வாலிபர் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதனையடுத்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது நேற்று இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரனை முடிந்த நிலையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும் 40000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார்











