திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று (31.07.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புலன் விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும்,
அரசு வேலை வாங்கி தருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து, அதில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்,
கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும்,
அரசு அனுமதியின்றி சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள், சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் நேரடியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.T.ஈஸ்வரன், அவர்கள் உடனிருந்தார்கள்.