இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாவட்ட காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து (18.05.2024) காவலர்களின் உடல் மற்றும் மன வலிமையை அதிகரிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவலர்களுடன் காஞ்சனகிரி மலைப்பகுதியில் நடைப்பயிற்சியை மேற்கொண்டார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சரவணன் (தலைமையிடம்), திரு. குணசேகரன் (CWC), திரு.குமார் (CCW), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW) மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது.