திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி அடுத்துள்ள வல்லம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு பத்ரகாளியம்மன், கருப்பசாமி கோவில் உள்ளது .அந்த பகுதி கிராம மக்கள் 15 நாட்களுக்கு முன் காப்புகட்டி திருவிழாவுக்கு விரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கோவில் அருகே உள்ள தெப்பத்திலிருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க 100க்கும் மேற்பட்டோர் ஊரடங்கை மறந்து கூட்டமாக ஒன்று கூடினர்.
கொரோனா பரவும் அபாயம். இதில் ஒருவர் கூட முகவசம் மற்றும் இடைவெளியின்றி ஒவ்வொரு ஒருவர் உற்சாகத்துடன் திருவிழா கொண்டாடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஊரடங்கு மீறி விழா நடத்தியதாக ராஜபாண்டி,ராஜா, குருசாமி,சங்கர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஊரடங்கை மீறி பொதுமக்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா