திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்படி, சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (07.01.2026) வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி ஞானதி அவர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் தலைமையில் நடத்தினர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, சாலை பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து சட்டங்களை கடைபிடிப்பதின் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விபத்துகளைத் தவிர்க்க பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
















