கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்திலுள்ள அருள் என்பவரின் வாட்ஸ்ஆப்பிற்கு குற்றவாளிகளில் ஒருவர் 10,000 /-ரூபாய் பணம் கட்டினால் இரட்டிப்பாக 20,000 /- ரூபாய் பணம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இக் குறுஞ்செய்தியை பார்த்த அருள் மோசடியை தடுக்கும் பொருட்டு ஊத்தங்கரை காவல் நிலையம் சென்று போலீசாரிடம் குறுஞ்செய்தியை காண்பித்து மோசடியை தடுக்கும் பொருட்டு, குற்றவாளிகளை ஊத்தங்கரை பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தபோது ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் மூன்று நபர்களை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.