கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கணேசன் என்பவருக்கும் குற்றவாளிக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் குற்றவாளி தான் ஜெயிலுக்கு சென்றதற்கு காரணம் கணேசன்தான் என்று நினைத்து.
வாட்ஸ் அப்பில் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் செய்து கணேசனுக்கு அனுப்பியது சம்பந்தமாக 06.11.2021 ஆம் தேதி 11.00 மணிக்கு கெலமங்கலம் To உத்தனப்பள்ளி ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் கணேசன் குற்றவாளியை பார்த்து கேட்டதற்கு.
குற்றவாளி மீண்டும் கெட்ட வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப்பதிந்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.