மதுரை: வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலசுந்தரம், பாலாஜி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், வரவேற்றார். இந்த விழாவில் புலவர் குருசாமி, மேலாண்மை குழு தலைவர் வாசுகி, உறுப்பினர்கள் சசிகுமார்,அங்காள ஈஸ்வரி, பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி ,உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆசிரியர் அனிதா மேரி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். விளையாட்டு, பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற் கல்வி ஆசிரியர் சுரேஷ் ,விவசாய ஆசிரியர் சுரேஷ், செந்தில் ,முருகன், ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் ஆசிரியர்கள் நிர்மலா ரெஜிஸ்ராணி, கேத்தரின் அனிதா கற்பகவல்லி ,ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தீர்த்த நாயகி நன்றி கூறினார். அதேபோல் பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் , தலைமை தாங்கினார்.
பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பொறியாளர் தனபாலன், முன்னாள் மாணவர் பாலசரவணன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன், பரிசுகள் வழங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் நன்றி கூறினர். வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரங்கநாயகி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் ஆறுமுகம், வரவேற்றார் . ஆசிரியர் கவிதா, கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் பேசினார்.இந்த விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ,கவிதை போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகலிங்கம் பழனியம்மாள், அறக்கட்டளை தலைவர் கபிலன், பரிசுகள் வழங்கினார். முடிவில் தமிழ் ஆசிரியர் அழகேந்திரன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி