கோவை : கோவையில் எஸ்.பி.ஐ, வங்கி வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வங்கி ஊழியரே, மோசடியில் ஈடுபட்டது, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி சேர்ந்த ஊழியர் சுரேஷ், வாடிக்கையாளரும் புகார்தாரருமான செல்வராஜ் என்பவர், ஒப்படைத்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, கோவை பிரபல நகைக்கடையில் நகைகளை வாங்கியுள்ளார். அந்த நகைகளை மற்றொரு வங்கியில் அடகு வைத்து உள்ளார்.

இதனை குறுஞ்செய்தி மூலம் அறிந்த வாடிக்கையாளர் செல்வராஜ், கோவை மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரை அடுத்து காவல் ஆய்வாளர் திரு. அருண், தலைமையில் காவல்துறையினர், விசாரணை செய்ததில் வங்கி ஊழியர் திரு.சுரேஷ், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்