திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய பகுதியில் வாடகைக்கு டிராக்டரை வாங்கி, உரிமையாளரிடம் வாடகைக்கு கொடுத்தால் ஆறு மாதத்தில் புது டிராக்டர் வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை கூறி டிராக்டரை வாடகைக்கு பெற்று, சிறிது நாட்களில் வாடகை பணமும் தராமல் டிராக்டர் மற்றும் டிப்பரை ஒப்படைக்காமல் விற்று மோசடியில் ஈடுபட்ட – திருவாரூர் தாலுக்கா, குன்னியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் அருண்தாஸ் 36/24 கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்த கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.செல்வி வெர்ஜினியா மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. ,(Agri).,அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடியில் ஈடுபடும் நபர்கள், அடிதடி, ஆள்மராட்டம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.