இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மேலும் பிரச்சனையை தூண்டும் விதமான வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிணையில் விடமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி சமூக வலைதளங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக வாசகங்களை பதிவு செய்த பரமக்குடி உட்கோட்டம் கமுதக்குடியை சேர்ந்த மதன்விக்னேஷ் (25) த/பெ.முருகன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இது போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகவலைதளங்கள் மூலம் வன்முறை தூண்டும் விதமாகவோ, இருசமுதாயத்தினருக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவோ பரப்பும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை, MA., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி