திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை தொகுதியிலும் 18 லட்சத்து 73 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா பொறியியல் கல்லூரியில் தனி அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று திண்டுக்கல் சரக டிஐஜி மமுத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர்வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளையும், பூட்டுகள், முத்திரைகள், பாதுகாப்பு, சிசிடிவி, மூன்று அடுக்கு பாதுகாப்புகள், லைட்டிங் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன் போலீசாரும் சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா