திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாகன விபத்தில் காயமடைந்த போலீசாரிடம் எஸ்.பி. சீனிவாசன் நலம் விசாரித்தார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வாகன விபத்தில் காயமடைந்த அம்பிளிக்கை காவல் நிலையகாவலர் சக்தி வடிவேல் ராமலிங்கத்தை திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் எஸ்பி.சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்போது அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது எஸ்.பி. கூறியதாவது: போலீஸார் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருந்தால் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நாம் சமாளிக்கலாம். நம்பிக்கையே நம்மை வழி நடத்தும். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் ,என்றார்.
