தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை நகரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள லாரி ஜேசிபி மற்றும் கார்களில் உள்ள பேட்டரிகள் இரவு நேரங்களில் (12 மணிக்கு மேல் அதிகாலை 3 மணிக்குள்) தொடர்ச்சியாக திருடு (காணமல்) போவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டு பிடிக்க தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள் திரு உமாசங்கர் திரு ராஜேஷ், காவலர்கள் அருள்மொழிவர்மன், அழகு, நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில், விசாரணையில் ஈடுபட்டு வந்தார்கள்.
அதில் முதல் கட்டமாக தஞ்சை பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள லாரி மற்றும் கார்களில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டுள்ள நபர்களை கண்டுப் பிடிக்க அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு (சி,சி,டிவி) கேமராக்களின் பதிவாகியுள்ள காட்சிகளைகொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இவ்விசாரணையில் டாட்டா இண்டிகோ காரில் வந்து தொடர்ச்சியாக பேட்டரிகளை திருடியது திருச்சி முதலியார் சத்திரம் குட்செட் ரோடு சேர்ந்த சுலைமான் மகன் அல்லா பிச்சை (37) என்பதும், இவன் மீது ஆழ்கடத்தல், வழிபறி, செயின் பறிப்பு, வீடு உடைத்து திருடுவது மற்றும் செல்போன் டவர் பேட்டரி திருடுவது போன்ற செயல்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இந்நிலையில் அல்லாபிச்சை திருச்சி முதலியார் சத்திரம் குட் செட் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு இன்று (27-7-2022) ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக திருச்சி சென்று அவனை கைது செய்து அவனிடம் இருந்த செல் போன், டாடா இண்டிகோ கார் மற்றும் பேட்டரிகள் 11- (பதினொன்று) அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு அவனிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்