சென்னை : சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளி இன்றி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இணை கமிஷனர்கள் (சட்டம்-ஒழுங்கு) நந்தகுமார், பாலகிருஷ்ணன், இணை கமிஷனர்கள் (போக்குவரத்து) ஜெயகவுரி, லட்சுமி உள்பட அதிகாரிகளும், பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள கீழ்க்காணும் தெருக்களில் 13-ந்தேதி (இன்று) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
கொத்தவால்சாவடி உள்ளே செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை-லோன் ஸ்கொயர்-அண்ணாபிள்ளை தெரு வழியாகவும், பிரகாசம் சாலை- பி.வி.ஐயர் தெரு வழியாகவும் உள்ளே செல்லலாம்.
பிரகாசம் சாலை முதல் அண்ணாபிள்ளை தெரு மற்றும் ஆதியப்பா தெரு ஆகிய தெருக்கள் தங்கசாலை வரை வாகனங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக செயல்படும்.
தங்கசாலை முதல் தாதா முத்தியப்பன் தெரு, பிரகாசம் சாலை வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
தங்கசாலை அரசு மைய அச்சகம் முதல் மகாசக்தி ஓட்டல் வரை நடைமுறையில் உள்ளவாறு இருவழிப்பாதையாக செயல்படும்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா