இராமநாதபும்: இராமநாதபும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.,இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி இராமேஸ்வரம் பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை கண்டுப்பிடிப்பதற்காக இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சுவாச்.,இ.கா.ப,அவர்கள் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தீவிர விசாரனையில் ஈடுபட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த இராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சோ்ந்த மாதேஷ் மற்றும் கபிலன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேற்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து திறமையாக துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சுவாச்., இ.கா.ப, அவர்கள் தலைமையிலான இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.,இ.கா.ப, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.