திண்டுக்கல் : (02.08.2022 ), திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் உத்தரவின் பேரில் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சிவசக்தி, அவர்கள் மேற்பார்வையில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.உதயக்குமார், அவர்கள் தலைமையில் பழனி உட்கோட்ட குற்ற தடுப்புபிரிவு காவல்துறையினர் பழனி நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், மேற்படி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்கள் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (26), சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (32) மற்றும் வினோத் குமார் (27) என்பவர்கள் என தெரிய வந்தது, இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 07 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.