திருவாரூர் : பேரளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கவிராஜ் (23/25) என்பவரை விசாரணை செய்து இன்ஜின் நம்பர் மற்றும் சேஸ் நம்பரை பார்வையிட்டபோது அது காணாமல் போன அருண்குமார் என்பவரது இருசக்கர வாகனம் என கண்டறியப்பட்டு, மேலும் கவிராஜ் (23/25) த/பெ. ராஜேந்திரன், தெற்கு தெரு, நெடுஞ்சேரி, பேரளம் என்பவரை கைது செய்து, அவரிமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்டு இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்