விருதுநகர் : காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த TN 67 AB 2515 Splendor இரு சக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., அவர்கள் உத்தரவின்படி, அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாய ஜோஸ், திருச்சுழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் ஆகியோர் வழிகாட்டல் படியும், காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் திரு. மூக்கன், உதவி ஆய்வாளர்கள் திரு.அசோக்குமார், திரு.வீரணன், திரு.ஆனந்தஜோதி மற்றும் திரு.திருமலைக்குமார் காவலர்கள் திரு.அழகு கார்த்திக்ராஜா, திரு.சிவபாலன், திரு.இளையராஜா மற்றும் திரு.பழனி ஆகியோர் உட்பட தனிப்பிரிவு அமைத்து வாகன சோதனையில் ஈடுபடுகையில் நரிக்குடி மெயின்ரோட்டில் பாப்பணம் விலக்கு அருகே சந்தேகத்தின் பேரில் வந்த டூ வீலரை நிறுத்தி விசாரித்ததில் காரியாபட்டியை சேர்ந்த இருவர் காரியாபட்டியில் காணாமல் போன TN 67 AB 2515 Splendor வாகனத்தை திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரித்தபோது இருவரும் கொத்தனார் வேலை செய்வதாகவும் வேலைக்கு போன இடத்திலிருந்து வரும் பொழுது இரு சக்கர வாகனங்களை திருடிக்கொண்டு வருவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் வேலைக்கு சென்ற திருப்பூரில் இருந்து ஒரு வாகனமும், திருச்செந்தூரிலிருந்து மூன்று வாகனங்களும், அருப்புக்கோட்டையில் இருந்து இரண்டு வாகனங்களும், பரமக்குடியிலிருந்து இரண்டு வாகனமும், மதுரையிலிருந்து இரண்டு வாகனமும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு வாகனமும் திருடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வி.ஏ.ஓ மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் திருட்டு வாகனத்தை வாங்கிய இருவர் உட்பட 4 பேரையும் கைது செய்து திருடிய 13 இருசக்கர வாகனங்களும், இரண்டு ஆட்டோ மற்றும் ஒரு டாடா ஏசி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.