கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி கனிம வளத்துறையினர் தமிழக-ஆந்திர மாநில எல்லையில்உள்ள கணமூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கிரானைட்கற்கள் ஏற்றி வந்த 4 லாரிகளை சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் பர்கூர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர். மேலும் கிரானைட் கற்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்