திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (26.08.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாமணி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்த போது காரைக்காலில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா, வெங்கட்டன்குறிச்சி பகுதியை சேர்ந்த 1.ராமச்சந்திரன் மகன் கண்ணதாசன் (வயது-24). 2.வேலு மகன் ரவிக்குமார் (வயது-42). 3.பழனி மகன் பரமேஸ்வரன் (வயது-25). ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி நபர்கள் கடத்தி வந்த சுமார் ரூ.30,000/- மதிப்பிலான 1)super select brandy-15, 2)one up brandy- 15, 3)polo brandy-136 ஆகியவை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.சிறப்பாக செயல்பட்டு மது கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் சோதனைச்சாவடி பணியில் இருந்த PC-1508 வினோதகன், WPC-1217 சூர்யா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள். மேலும், அண்டை மாநில மதுபாட்டில்களை கடத்தி வரும் நபர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.