திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு. சாகுல்ஹமீது, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சில் ஹோட்டல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தென்னவனேரிவை சேர்ந்த லிங்கபெருமாள் (27), அழகிய பாண்டியபுரம், புது தெருவை சேர்ந்த ஹரிஹரசுதன் (27), ஆகிய இருவரும் வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்யும்போது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர்களின் வாகனத்தை சோதனை செய்தபோது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு, லிங்கபெருமாள், ஹரிஹரசுதன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் குற்றவாளியிடமிருந்து 82.752 கிலோ புகையிலை பொருட்களையும், நான்கு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.