திருவாரூர் 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் காவலர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். (01.04.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் கீரனூர் மாவட்ட சோதனை சாவடியில் பணியில் இருந்த GR-I 783, திரு.கிருஸ்துராஜ் மற்றும் WPC 1020, புஷ்பா ஆகியோர் திருவாரூரிலிருந்து மயிலாடுதறை மார்கமாக சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது பேருந்தில் பயணித்த ஒருவரின் பையில் ரூபாய்.12,85,000/- பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பையில் அதிக அளவில் பணம் எடுத்து வந்த மன்னார்குடி, மேல நாகை பகுதியயை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவரின் மகன் தமிழ்வாணன் (வயது-47). என்பவரை விசாரணை செய்த போது, உரிய ஆவணங்கள் எதும் இல்லாமல் மேற்படி தொகையை எடுத்து வந்தது விசாரணையில் தெரிகிறது. தேர்தல் விதிகளின் படி ரூ.10,00,000/- அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டதால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சிறப்பாக சோதனை செய்து ரூ.12,85,000/ பணத்தை கைப்பற்றிய GR -I 783, திரு.கிருஸ்துராஜ், மற்றும் WPC 1020, புஷ்பா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.