திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.09.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தன்குடி மற்றும் வேலங்குடி மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் திடீர் ஆய்வு செய்தார்கள். மேலும், சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை தனது அதிவிரைவுப்படை காவலர்களை கொண்டு தீவிர சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்தார்கள். பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியதுவம் குறித்து எடுத்துரைத்து, சோதனைச்சாவடி வழியே செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.