சேலம் : இந்த நிலையில் சேலம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரையில் இருந்து சேலத்திற்கு கஞ்சா விற்பனை செய்ய கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது, இதன்பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ,செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் ரோஜாராமன், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் சீலநாயக்கன்பட்டி யிலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தேகம் ஏற்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. பின்னர் வாகன ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது மதுரை பெரியார் நகர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பது தெரியவந்தது உடனே அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா மற்றும் கார் உள்ளிட்டகளை பறிமுதல் செய்தனர் ,மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் சோதனை தொடர்ந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.