பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சரியான அளவில் மேற்படி அரசு உதவிப் பொருட்கள் சேரும் வகையிலும், குடிமை பொருட்கள் திருட்டு போவதை தடுக்கவும்.
மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி திருச்சி சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் திருச்சி வட்ட காவல் ஆய்வாளர் திரு.சிவசுப்ரமணியன் அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் திருமதி.வேம்பு அவர்களின் குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், லாடபுரம் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அளவுக்கு அதிகமாக குடிமை பொருட்களை ஏற்றிவந்த வாகனங்களை சோதனையிட்டும், அதிகமாக குடிமை பொருட்களை ஏற்றி வந்தவர்களிடம் இருந்து 320 கிலோ குடிமை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.