இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் சென்ற வாகனத்தில் கேட்பாரற்று கிடந்த ஏழரை பவுன் தங்கச்சங்கிலியை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தங்கச்சங்கிலியை உரிமையாளர் கருப்பாயி என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும், வாடகை வாகனத்தில் தொலைத்த சங்கிலியை மீட்டு, பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர் மணிகண்டனை சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா மற்றும் காவலர்கள் சால்வையணிவித்து பாராட்டினர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்