திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வாகனம் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்லவும், வாகன ஓட்டி மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வருபவரும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாகனம் ஓட்டிச் செல்லும் போது இடது அல்லது வலது பக்கம் செல்லும்போது சிக்னல்(indicator) அல்லது கை சைகைகளை காண்பித்த பின்னர் செல்லவும், மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது . குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என்பது பற்றி கூறி, இதனால் குடும்பத்தினற்கு ஏற்படும் இழப்புகளை பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு விபரம் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.