சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல், தெற்கு மாவட்ட காவல் துறை சார்பில் மவுன்ட் போக்குவரத்து உட்கோட்டத்தில் குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜி.எஸ்.டி சாலை வைஷ்ணவா கல்லூரி சந்திப்பில் எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் ஜீரோ வைலேசன் ( 0 Violation ) பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டது.
விழிப்புணர்வு முகாமினை திருமதி . செந்தில்குமாரி, இ.கா.ப., காவல் இணை ஆணையாளர், போக்குவரத்து தெற்கு மண்டலம் அவர்கள் துவங்கி வைத்தார். காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து தெற்கு மாவட்டம் திரு.N.குமார் அவர்களும் உடனிருந்தார்கள். விதிமுறைகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விதிமுறைகளை மீறி சென்ற வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இன்று 13.06.2021 தாம்பரம் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்