திண்டுக்கல்: நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பேபி அம்மையநாயக்கனூர் சுங்கச்சாவடி அருகே இரவு ரோந்து பணியின் போது நெடுஞ்சாலை ரோந்து காவலர்களுடன் இணைந்து இரவு நேர விபத்தினை தடுக்கும் பொருட்டு .
லாரிகள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு சூடான தேநீர் மற்றும் தண்ணீர் வழங்கினர். இது வாகன ஓட்டிகளுக்கு உற்சாகம் தருவதாக இருந்தது.
மேலும் அவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேரத்தில்தான் விபத்துக்கள் நடக்கிறது.இரவு நேரத்தில் நடக்கும் வித்துக்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என போலீசார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா