திருநெல்வேலி: மத்திய அரசாங்கம் சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சட்டமானது அமலுக்கு வந்த பின்பு வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான பணம் வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்.ஆனால் தற்பொழுது *சில தரகர்கள் ராயல் என்ஃபீல்ட் மற்றும் யமஹா போன்ற வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி 2 லட்சம் மற்றும் 3 லட்சம் ஆகிய அதிக விலைக்கு விற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் இவ் வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது ஆகவே மக்கள் யாரும் வாங்கி ஏமாற வேண்டாம்.வாகனம் அனைத்தும் உடைக்கும் பொழுது வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும் இவ்வாறு அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும்.
விழிப்புணர்வுக்காக. MG.ஜெயநிதி
வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர்
திருநெல்வேலி